பருப்பு வடை
தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு மற்றும் துவரம்பருப்பு 1 கப்,
சோம்பு - 1 தேக்கரண்டி,
பச்சை மிளகாய் - 1,
பெரிய வெங்காயம் - 1,
இஞ்சி - சிறிதளவு,
கறிவேப்பிலை - சிறிதளவு,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் தேவைக்கேற்ப.
செய்முறை:
கடலைப்பருப்பு மற்றும் துவரம் பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை வடிகட்டி மிக்ஸியில் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்க்கவும். பின்னர் நசுக்கிய சோம்பு, கறிவேப்பிலை, நறுக்கிய இஞ்சி சேர்த்து நன்கு பிசைந்து எடுத்துக் கொள்ளவும். பின்னர், வடை மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்து அதை வடையாக தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக்கொள்ளவும்.