கீரை குழம்பு
தேவையான பொருட்கள்
Advertisement
1கட்டு கீரை
12பல் பூண்டு நறுக்கியது
12சாம்பார் வெங்காயம்
10காய்ந்த மிளகாய்
2தக்காளி
2ஸ்பூன் வடகம்
1கொத்து கறிவேப்பிலை
1ஸ்பூன் கடுகு, உளுந்து
2ஸ்பூன் எண்ணெய்
தேவையானஅளவு உப்பு
சிறிதளவுபுளி
செய்முறை:
பாத்திரத்தில் பூண்டு, வெங்காயம், தக்காளி, மிளகாய் வற்றல் சேர்க்கவும்.அத்துடன் நறுக்கிய கீரையையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.வெந்ததும் சூடாக இருக்கும் போது புளியை சேர்த்து கலந்து ஆற விடவும்..ஆறியதும் மிக்ஸியில் கீரை, உப்பு சேர்த்துஅரைத்து கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வடகம், கறிவேப்பிலை தாளிக்கவும்.அத்துடன் கீரையை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.இப்போது சுவையான சத்தான கீரை குழம்பு தயார்.
Advertisement