காஞ்சிபுரம் உப்புமா
தேவையான பொருட்கள்
காஞ்சிபுரம் உப்புமா செய்ய தேவையான பொருட்கள்:
ரவா-150கிராம்(3நிமிடம் லேசாக வறுக்கவும்)
மீடியம் அளவு வெங்காயம்-2
தேங்காய் துறுவல்-3டீஸ்பூன்
நல்லெண்ணெய்-3டீஸ்பூன் (பெரியது)
உப்பு தூள்-தேவையான அளவு
பச்சை மிளகாய்-1
இஞ்சி சிறிய துண்டு-1
முழு மிளகு-1/2 டேபிள் டீஸ்பூன்
கடுகு-1/2 டேபிள் டீஸ்பூன்
முழு சீரகம்-1/2 டேபிள் டீஸ்பூன்
உடைத்த உளுந்து-1 டேபிள் ஸ்பூன்
கருவேப்பிலை-3கொத்து
செய்முறை:
150 கிராம் ரவா-வை 3நிமிடம் வாசம் வரும் வரை லேசாக வறுக்கவும். காஞ்சிபுரம் உப்புமா செய்வதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் தயார் செய்து கொள்ளுங்கள்.பாத்திரத்தில் 3டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு1/2டீஸ்பூன் முழு மிளகு போட்டு பொறிக்க விடவும்.அடுத்து 1/2 டீஸ்பூன் கடுகு,1/2டீஸ்பூன் முழு சீரகம்,1டீஸ்பூன் உடைத்த உளுந்து,3கொத்து கருவேப்பிலை,சிறிய துண்டு இஞ்சி பொடியாக நறுக்கியது,1 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது எல்லாவற்றையும் போட்டு தாளித்துக் கொள்ளவும்.பொடியாக நறுக்கிய 2வெங்காயத்தை போட்டு பொன் நிறமாக வதக்கிக் கொள்ளவும்.2டீஸ்பூன் தேங்காய் துறுவல்,தேவையான அளவு உப்பு தூள் போட்டு லேசாக வதக்கிக் கொள்ளவும். அடுத்து 150கிராம் ரவாவிற்கு (100கிராம் தயிர் கப்பில்)3கப் தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் கொதிக்கவிடவும்.150கிராம் வறுத்த ரவாவை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு கைவிடாமல் கிண்டவும்.அடுத்து 1டீஸ்பூன் தேங்காய் துறுவல் போட்டு கிண்டவும்.அடுத்து குறைந்த தீயில் பாத்திரத்தை 5நிமிடம் மூடி தம் வைக்கவும். காஞ்சிபுரம் உப்புமா ரெடி.