காஞ்சீபுரம் இட்லி
தேவையான பொருட்கள்
1 கப் பச்சரிசி
1 கப் புழுங்கல் அரிசி
1/4 கப் உளுத்தம்பருப்பு
1 மேஜை கரண்டி வெந்தயம்
1 மேஜை கரண்டி சுக்கு தூள்
1 மேஜை கரண்டி மிளகு தூள்
1 மேஜை கரண்டி ஜீரக தூள்
1/2 மேஜை கரண்டி பெருங்காய தூள்
1 மேஜை கரண்டி முந்திரி பருப்பு
2 கொத்து கறிவேப்பிலை
1/2 மேஜை கரண்டி கடுகு
1 மேஜை கரண்டி உளுத்தம்பருப்பு
5 மேஜை கரண்டி நெய்
செய்முறை:
முதலில் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை சுத்தம் செய்து, அதனுடன் வெந்தயம் சேர்த்து 8 மணிநேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.பின் ஊறவைத்த அரிசி மற்றும் பருப்பை நன்கு அரைத்து உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும், ஒரு நாள் இரவு வரை மாவை புளிக்க விட வேண்டும்.அடுத்ததாக ஒரு சிறிய வாணலியில் நெய் ஊற்றி அதில் கடுகு முந்திரி சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும், பிறகு உளுத்தம் பருப்பு, சீரகத் தூள், மிளகு தூள்,சுக்கு தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு பொன்னிறமாக வைத்துக்கொள்ள வேண்டும்.வறுத்த கலவையை மாவுடன் சேர்த்து நன்கு கிளறிக் கொள்ள வேண்டும், பின் சம அளவு இருக்கும் ஐந்து அல்லது ஏழு டம்பளர் எடுத்து அதில் நெய் அல்லது எண்ணெய் தடவி மாவை அரை டம்ளர் வரை ஊற்றி இட்லி குக்கரில் வேக வைக்க வேண்டும்.15 நிமிடங்கள் வரை வேக வைத்துக் கொள்ள வேண்டும்.சுடச்சுட கோவில் இட்லி தயார்