ஜெல்லி ஐஸ்க்ரீம்
தேவையானவை :
ஜெல்லி பவுடர் - 100 கிராம்
ஐசிங் சுகர் - 300 கிராம்
ப்ரெஸ்க்ரீம் - 300 - மில்லி
செர்ரி பழம் - 100 கிராம்
பால் - 1 1/2 லிட்டர்
வெனிலா எசன்ஸ் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
முதலில் ஒரு பாத்திரத்தில் பாலைக்கொதிக்கவைத்து நன்கு வற்றக்காய்ச்சி இறக்கி ஆறவைக்கவும்.ஜெல்லி பவுடரை கொதிக்கும் நீரில் கட்டிகள் இல்லாமல் கரைத்துக்கொள்ளவும்.
ஆறிய பாலில் ஜெல்லி கலவையை வடிகட்டி சேர்க்கவும்.பின் ஐசிங்சுகர்,க்ரீம்,எசன்ஸ்,செர்ரி சேர்த்து நன்கு கலக்கி ஐஸ் கப்புகளில் ஊற்றி ப்ரிஜ்ஜில் வைத்து உரையவைத்து பரிமாறவும்