பலா பிஞ்சு பொரியல்
தேவையான பொருட்கள்
பலா பிஞ்சு- 1
தேங்காய்துருவல்- அரை கப்
மஞ்சள்தூள்- அரைஸ்பூன்
சோம்பு- அரைஸ்பூன்
பச்சை மிளகாய்- 2
சின்னவெங்காயம் -4
கருவேப்பிலை- 1கொத்து
தேங்காய்எண்ணெய்- 4 ஸ்பூன்
உப்பு -தேவைக்கு
கடுகு -கால்ஸ்பூன்
உளுந்தம்பருப்பு- கால்ஸ்பூன்
வர மிளகாய்-1
பூண்டு- 6 பல்
செய்முறை:
முதலில்பலா பிஞ்சை கட்பண்ணி நன்றாக சுத்தம்செய்து கொள்ளவும்.பின் குக்கரில் உப்பு,மஞ்சள் பொடி போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.பின்தேங்காய், பச்சைமிளகாய், வெங்காயம்,சோம்பு, பூண்டு போட்டு அரைத்துக் கொள்ளவும்.வேகவைத்தபலா பிஞ்சைஆறவிடவும்.பின் நன்குஉதிர்த்துவிடவும். அரைத்ததைச்சேர்க்கவும்.வேறுவாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்தம் பருப்பு,வரமிளகாய்,கருவேப்பிலை தாளித்து உதிர்த்த பலாபிஞ்சு,அரைத்ததைச் சேர்த்து நன்கு பிரட்டிவிடவும்.அரைத்ததேங்காய் ஒன்று சேர்ந்து விடும்.தேங்காய்வாசம்வரும் போதுகேஸை ஆப் பண்ணிவிடவும்.சுவையானபலா பிஞ்சு பொரியல்ரெடி