ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு கிரேவி
5உருளைக்கிழங்குகள்
அரைக் கப் தேங்காய் துருவல்
2 பெரிய வெங்காயம்
ஒரு சிறிய தக்காளி
சிறிதளவுஇஞ்சி
2 பச்சை மிளகாய்
நான்கு பல் பூண்டு
2பட்டை துண்டுகள், கிராம்பு
இரண்டு ஸ்பூன் கொத்தமல்லி தூள்
இரண்டு முந்திரி
அரை ஸ்பூன் சோம்பு
சிறிதளவுகொத்தமல்லி இலைகள்
செய்முறை:
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சிறிதளவு சோம்பு சேர்த்து வதக்கி அதில் அறிந்த பெரிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும். வெங்காயம் தக்காளி வதங்கியவுடன் அதில் வேக வைத்து தோல் உரித்த உருளைக்கிழங்குகளை சேர்த்து வதக்கவும்.துருவிய தேங்காய், பச்சை மிளகாய், பட்டை, கிராம்பு, சோம்பு முந்திரி,கொத்த மல்லி தூள் மற்றும் இஞ்சி பூண்டுஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.அரைத்த கலவையை வதக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு இறக்கி மல்லித்தழை தூவினால் அருமையான சுவையான ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு கிரேவி தயார்.