ஹார்லிக்ஸ் ப்ரிமிக்ஸ்
தேவையானவை:
சம்பா கோதுமை - 2 கப்,
பார்லி - ½ கப்,
பாதாம் (முழு) - ½ கப்,
தோலுடன் கூடிய வேர்க்கடலை - ¼ கப்,
சர்க்கரை - 1 கப்,
பால்பவுடர் - ½ கப்.
செய்முறை:
கோதுமை, பார்லி இரண்டையும் தனித்தனியே கழுவி துணியில் போட்டு தனித்தனியே உலர விடவும். உலர்ந்ததும் வெறும் வாணலியில் இரண்டையும் தனித்தனியே வாசனை வரும் வரை வறுக்கவும். பாதாமை தோலுடன் வறுக்கவும். வேர்க்கடலையை தோலுடன் வறுத்து தோலை நீக்கவும். மிக்ஸி ஜாரில் ஒவ்வொன்றையும் தனித்தனியாக அரைத்து ஒரு தட்டில் கொட்டி சல்லடையால் சலிக்கவும். சலித்தப் பொருட்களுடன் சர்க்கரையை பவுடராக்கி சேர்க்கவும். பால் பவுடரையும் அதில் சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாக கலந்து விட்டு ஆறியதும் ஒரு ஏர்டைட் கன்டெய்னரில் வைக்கவும். விருப்பப்பட்டால் 1 டேபிள் ஸ்பூன் கோக்கோ பவுடரையும் சேர்க்கலாம். ஒரு கப் பாலை சூடு செய்து அதில் 2 டேபிள்ஸ்பூன் ஹார்லிக்ஸ் ப்ரிமிக்ஸ் பவுடரைச் சேர்த்து கலக்கி குடித்தால் சுவையான ஹார்லிக்ஸ் தயார். பாலுக்கு பதிலாக 1 கப் வெந்நீரில் 2 ஸ்பூன் ஹார்லிக்ஸ் ப்ரிமிக்ஸ் ேசர்த்து குடிக்கலாம்.