ஹெல்த்தி லட்டு
தேவையானவை
Advertisement
சிறுதானிய மாவு - 2 கப்
கவுனி அரிசி மாவு - கால் கப்
துருவிய முந்திரி, பாதாம், நிலக்கடலை,
பேரீச்சம் பழம்,
திராட்சை அனைத்தும் சேர்த்து - கால் கப்
நெய் - அரை கப்
நாட்டுச் சர்க்கரை - முக்கால் கப்.
செய்முறை:
மாவு வகைகளை வெறும் வாணலியிலிட்டு, மிதமான தீயில் வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். பின்னர், துருவிய முந்திரி, பாதாம், நிலக்கடலை, பேரீச்சம் பழம், திராட்சை கலவையை நெய்யில் வறுத்து ஏற்கெனவே வறுத்து வைத்த மாவுடன் கலந்து, சூடாக இருக்கும் போதே பொடித்த நாட்டுச் சர்க்கரையை கலந்து, காய்ச்சிய நெய்யை ஊற்றி சிறுசிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.
Advertisement