கருவேப்பிலை தொக்கு
தேவையான பொருட்கள்
Advertisement
1 கப் கறிவேப்பிலை
1/2 ஸ்பூன் வெந்தயம்
1/2 ஸ்பூன் மிளகு
1 ஸ்பூன் சீரகம்
4வர மிளகாய்
சிறிதளவுபுளி
1/4 ஸ்பூன் பெருங்காய தூள்
சிறிதளவுவெல்லம்
1சிறு துண்டு இஞ்சி
5 ஸ்பூன் நல்லெண்ணெய்
1 ஸ்பூன் கடுகு
செய்முறை
வெறும் வாணலியில் வெந்தயத்தை வருத்துக் கொள்ளவும்.அதே வாணலியில் மிளகு சீரகம் சேர்த்து கலர் மாறும் வரை வறுக்கவும்.வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு வர மிளகாய் பெருங்காய தூள் சேர்த்து வதக்கி ஆற வைக்கவும்.மிக்ஸியில் பச்சை கறிவேப்பிலை புளி உப்பு வறுத்த அனைத்தையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.பிறகு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு பொரிந்ததும் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும். பின் வெல்லம் சேர்த்து எண்ணெய் பிரிந்து கெட்டியாகும் வரை வதக்கவும். சுவையான கறிவேப்பிலை தொக்கு ரெடி.
Advertisement