மாப்பிள்ளை சம்பா அரிசி பாகு பணியாரம்
தேவையான பொருட்கள்
மாப்பிள்ளை சம்பா அரிசி - 6 பங்கு
கருப்பு உளுந்து - 1 பங்கு
வெல்லம் - 7 பங்கு
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை
அரிசி, உளுந்தை 4 மணி நேரம் ஊறவைத்து தனி தனியாக இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். பிறகு உப்பு, சீரகம் சேர்த்து ஒன்றாக கலக்கவும். ஒரு பாத்திரத்தில் வெல்லம், ஏலக்காய் பொடி மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். ஆனால், பாகு பதத்திற்கு முன்பே இறக்கி விட வேண்டும். இன்னொரு பக்கம் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி அரைத்த மாவை சிறு கரண்டியில் சிறு சிறு உருண்டைகளாக பொரித்து எடுத்து வெல்ல பாகில் போட்டு மூடி வைக்கவும். சுவையான மாப்பிள்ளை சம்பா அரிசி பாகு பணியாரம் தயார்.