கேழ்வரகு, உளுந்து பானகம்
Advertisement
கேழ்வரகு - ½ கப்,
உளுந்து (கருப்பு) - ½ கப்,
தண்ணீர் - தேவையான அளவு,
ஏலக்காய் - சிறிதளவு,
சுக்கு - சிறு துண்டு.
நாட்டு சர்க்கரை (அ) வெல்லம் - தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் தனித் தனியாக கேழ்வரகு, உளுந்து லேசாக வறுத்துக் கொள்ளவும். ஆறின பிறகு மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். பாத்திரத்தில் 6 டம்ளர் தண்ணீர் விட்டு, மிக்ஸியில் பொடி செய்ததை கலந்து லேசாக தீயில் வைத்து கிளறி, ஏலக்காய், சுக்கு போட்டு கிளறவும். வெந்தவுடன் வெல்லம் போட்டு கிளறி சிறிது நேரம் கழித்து இறக்கவும். கை, கால், இடுப்பு வலி, எலும்பு வலிமைக்காகவும் ஒரு டம்ளர் குடிக்கலாம்.
Advertisement