பச்சை சுண்டைக்காய் சாம்பார்
பச்சை சுண்டைக்காய் - அரை கப்
துவரம் பருப்பு - 100 கிராம்
வெங்காயம் நறுக்கியது - 100 கிராம்
தக்காளி நறுக்கியது - 100 கிராம்
பெருங்காயத் தூள் - சிறிது
இஞ்சி நறுக்கியது - 1 தேக்கரண்டி
பூண்டு நறுக்கியது - 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
தனியா தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
தேங்காய்ப் பால் - 1 தேக்கரண்டி.
செய்முறை:
சுண்டைக்காயை வேக வைக்கவும். பிறகு, வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்கவும். அதில் வெங்காயம், இஞ்சி, பூண்டு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கி, பின் தக்காளி, வேக வைத்த பருப்பு, சுண்டைக்காய் தேவையான அளவு உப்பு, தண்ணீர் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். இதில் ஒரு தேக்கரண்டி தேங்காய்ப்பால் ஊற்றினால் சத்தான பச்சை சுண்டைக்காய் சாம்பார் தயார்.