க்ரீன் சிக்கன் 65
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
இஞ்சி - 1 இன்ச் துண்டு
பூண்டு - 5 பல்
புதினா - சிறிது
சிக்கன் - 250 கிராம்
மல்லித் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
எலுமிச்சை சாறு - சிறிது
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் சிக்கனை மஞ்சள் தூள் சேர்த்து நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.பின்னர் மிக்சர் ஜாரில் பச்சை மிளகாய், சீரகம், கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, புதினா சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.பின்பு ஒரு பாத்திரத்தில் சிக்கனை எடுத்து, அதில் மல்லித் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், மிளகுத் தூள், தயிர், அரிசி மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் அரைத்த விழுதை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு பிசைந்து, 2 மணிநேரம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து, அத்துடன் சிறிது கறிவேப்பிலை சேர்த்து, சிக்கனை பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான க்ரீன் சிக்கன் 65 தயார்.