பாசிப்பருப்பு பீன்ஸ் பொரியல்
தேவையான பொருட்கள்
Advertisement
400 கிராம் பீன்ஸ்
1/4 கப் அளவு பாசிப்பருப்பு
2 வெங்காயம்
1/4 கப் அளவு எண்ணெய்
1/2 மூடி துருவிய தேங்காய்
1 ஸ்பூன் கடுகு
10 கருவேப்பிலை
1/2 ஸ்பூன் மிளகாய் தூள்
1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
செய்முறை:
பீன்ஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும் இதனை குக்கரில் சேர்த்து கூடவே பாசிப்பருப்பு சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் விட்டு இரண்டு விசில் வேக வைக்கவும்.ஸ்டவ் வில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை நறுக்கிய வெங்காயம் சேர்த்து தாளிக்கவும். வெங்காயம் வதங்கியதும் வேகவைத்த பீன்ஸ் மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து தண்ணீர் வற்றும் வரை சமைக்கவும். துருவிய தேங்காய் சேர்த்து ஒரு நிமிடம் அடுப்பில் வைத்து தீயை நிறுத்தவும்.
Advertisement