கிரீன் ஆப்பிள் ஊறுகாய்
தேவையான பொருட்கள்
2கிரீன் ஆப்பிள் (மீடியம் சைஸ்)
2 1(3 ஸ்பூன்)ஸ்பூன்காஷ்மீரி மிளகாய் தூள், தனி மிளகாய் தூள்
1 ஸ்பூன்கடுகு,வெந்தயம் வறுத்து பொடித்தது
தாளிக்க:-
கடுகு 1 டீ ஸ்பூன்
3சி.மிளகாய்
1 ஆர்க்குகறிவேப்பிலை
1 டீஸ்பூன்ம.தூள்
1 டீ ஸ்பூன்பெருங்காயத்தூள்
2 டேபிள் ஸ்பூன்ந.எண்ணெய்
1 டீஸ்பூன்வினிகர்
ருசிக்குகல் உப்பு
செய்முறை:
ஆப்பிளை சுத்தம் செய்து சற்று பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.கடாயில் த.எண்ணெய் காய்ந்ததும் கடுகு போடவும்.கடுகு பொரிந்ததும், நறுக்கின ஆப்பிளை போட்டு அடுப்பை சிறிய தில் வைத்து சிறிது வதக்கவும்.உப்பு சேர்க்கவும்.ஒன்று சேர வதங்கியதும் அடுப்பை நிறுத்தி விடவும்.ஆறினதும் ஒரு பௌலில் எடுக்கவும்.கடாயில், ந.எண்ணெய் விட்டு காய்ந்ததும்,எண்ணெயில் ம.தூள் போடவும்.பிறகு காஷ்மீரி மி.தூள், மிளகாய் தாளிக்கவும்.பின் கறிவேப்பிலை போட்டதும்,வதக்கின ஆப்பிளை போடவும்.பின் லேசாக கிளறி விடவும். பிறகு பெருங்காயத்தூள்,வறுத்து அரைத்த கடுகு, வெந்தயம் பொடியை போட்டு ஒன்று சேர மெதுவாக கிளறவும்.அடுப்பை நிறுத்தி விட்டு வினிகர் சிறிது விடவும்.ஒன்று சேர கிளறவும். இப்போது, ஆந்திரா ஸ்டைல்,கிரீன் ஆப்பிள் ஊறுகாய் தயார்.