இஞ்சி துவையல்
இஞ்சி தோல் நீக்கி பொடியாக நறுக்கியது - ½ கப்,
தனியா - 1 டீஸ்பூன்,
மிளகாய் - 5,
கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு - 3 டீஸ்பூன்,
தேங்காய் துருவல் 4 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி இஞ்சியை போட்டு நன்றாக வதக்கவும். அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய் போட்டு வறுத்து தேங்காய் துருவல், உப்பு, புளி சேர்த்து அரைத்து தேவையான நீர் சேர்த்து நைசாக அரைக்கவும். சிறிது வெல்லம் சேர்க்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தது.