நெய் அப்பம்
Advertisement
பச்சரிசி-200 கிராம்,
வெல்லம் - ½ கிலோ,
தேங்காய் - 1 மூடி,
ரஸ்தாளிப்பழம் - 2,
நேந்திரம் பழம் -1,
ஏலக்காய் தூள் ½ டீஸ்பூன்,
எண்ணெய்- தேவைக்கேற்ப.
செய்முறை:
பச்சரிசியை சுத்தம் செய்து இயந்திரத்தில் கொடுத்து சற்று கரகரப்பாக கரகரவென்ற பதத்தில் மாவாக்கிக் கொள்ளவும். வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டி அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். கொதிக்கும் வெல்லக் கரைசலில் பச்சரிசி மாவை மெதுவாகத் தூவி, கட்டியில்லாமல் கரைத்துக் கொண்டு அடுப்பிலிருந்து இறக்கவும். இந்தக் கலவையில் ரஸ்தாளிப்பழம், நேந்திரம் பழம், ஏலக்காய் தூள், சிறு சிறு துண்டுகளாக்கிய தேங்காய் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலந்து கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும் மாவை கரண்டியில் ஆப்பமாக ஊற்றி பொரித்தெடுக்கவும்.
Advertisement