நெய் அப்பம்
தேவையானவை:
நெய் - ¼ கிலோ,
தேங்காய் - 1,
பச்சரிசி - ½ கிலோ,
வெள்ளை உளுந்து - 200 கிராம்,
உப்பு - தேவைக்கு.
செய்முறை:
முதலில் அரிசி, உளுந்தை ஊறவைத்து, ஊறியபின் தண்ணீர் வடித்து விட்டு தேங்காய் துருவி அரிசியுடன் ஆட்டுரலில் அரைத்து எடுக்கவும். எடுக்கு முன் தேவையான அளவு உப்புப் போட்டு அரைத்து எடுக்கவும். வாணலியில் நெய்யை விட்டு அடுப்பில் வைக்கவும். மாவை இட்லி பதத்துக்கு தண்ணீர் விட்டுக் கரைத்து, நெய்யை வாணலியில் ஊற்றி அடுப்பில் வைத்துக் காய்ந்ததும் மாவினை கரண்டியால் எடுத்து ஊற்றவும். சிறு தீயில் வெண்மை பதத்தில் எடுக்கவும். நெய் அப்பத்துடன் தேங்காய் சட்னி தொட்டு சாப்பிட்டால் சுவையாக, மணமாக இருக்கும்.