தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விநாயகர் சதுர்த்தி வெரைட்டி கொழுக்கட்டைகள்

முழு முதற் கடவுளான பிள்ளையாரின் பிறந்த நாள்தான் விநாயகர் சதுர்த்தி. அன்று வீட்டில் அவருக்கு பிடித்த பலகாரங்களை செய்து படைப்பது வழக்கம். அதில் பெரும்பாலும் லட்டு, எள்ளுருண்டை, கொழுக்கட்டை கண்டிப்பாக இருக்கும். கொழுக்கட்டையே ஆரோக்கியமான உணவு. அதை மேலும் ஆரோக்கியமான முறையில் வழங்கியுள்ளார் சமையல் கலைஞர் நாகலட்சுமி.

Advertisement

ராகி கொழுக்கட்டை

தேவையானவை:

சம்பா ரவை - 1 கப்,

உப்பு - தேவையான அளவு,

துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்,

தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன்,

பச்சை மிளகாய் - 2,

எலுமிச்சை சாறு - ½ டீஸ்பூன்.

தாளிக்க:

எண்ணெய் - 5 ஸ்பூன்,

கடுகு - 1 டீஸ்பூன்,

கடலைப்பருப்பு,

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,

கறிவேப்பிலை - ஐந்தாறு,

பெருங்காயம் - ½ டீஸ்பூன்.

செய்முறை:

முதலில் ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்தவற்றை சேர்த்து பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கி ரவையையும் சேர்த்து லேசாக வறுத்து ஒரு பாத்திரத்தில் மாற்றவும். தேங்காய் துருவல் 4 ஸ்பூன், 2 கப் நீர் விட்டு, உப்பு சேர்த்து நன்கு கொதித்ததும் ரவையை கொட்டி கிளறவும். வெந்ததும் எண்ணெய் சேர்த்து கிளறி இறக்கவும். கடைசியில் எலுமிச்சை சாறு சேர்த்து ஆறவிட்டு பிடி கொழுக்கட்டைகளாக பிடித்து ஆவியில் 5 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும். எலுமிச்சை சாறு சேர்க்காமலும் செய்யலாம்.

பிள்ளையார்பட்டி மோதகம்

 

தேவையானவை:

தேங்காய் துருவல்,

பச்சரிசி, வெல்ல தூள் - 1 கப்,

பாசிப்பருப்பு - ½ கப்,

ஏலக்காய் தூள் - ½ டீஸ்பூன்,

நெய் - 3 டீஸ்பூன்,

தண்ணீர் - 3 கப்.

செய்முறை:

முதலில் அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் 10 நிமிடம் ஊற வைத்து வடிகட்டி ஈரமின்றி ஒரு காட்டன் துணியில் நிழலில் பரப்பி காய விடவேண்டும். 10 நிமிடம் கழித்து கையில் பிடித்தால் பிடிபடவும், விட்டால் உதிருமாறு பக்குவத்தில் இருக்க வேண்டும். அதை ஒரு கடாயில் போட்டு மிதமான தீயில் வறுக்க வேண்டும். ஆறிய பின் மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும். பின் 3 கப் தண்ணீரை நன்கு கொதிக்க விட்டு மாவை சிறிது சிறிதாக சேர்த்து கட்டி தட்டாமல் கிளறவும். வெந்ததும் வெல்லம், தேங்காய் துருவல், நெய், ஏலப்பொடி சேர்த்து கிளறவும். ஆறிய பின் மோதகம் ஷேப் அல்லது உருண்டை வடிவில் பிடித்து ஆவியில் வேகவிடவும். முன்பே வெந்த மாவு என்பதால் பத்து நிமிடத்தில் வெந்து விடும். மிருதுவாக சுவையான கொழுக்கட்டை ரெடி.

கம்பு மாவு பிடி கொழுக்கட்டை

தேவையானவை:

கம்பு மாவு - 2 கப்,

நாட்டுச் சர்க்கரை - 1½ கப்,

ஏலப்பொடி - ½ டீஸ்பூன்,

நெய் - தேவையான அளவு,

தேங்காய் துருவல் - 1 கப்.

செய்முறை:

ஒரு கடாயில் கம்பு மாவை போட்டு தீயை மிதமாக வைத்து பச்சை வாசனை போக வறுத்து வைக்கவும். பின் ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைத்து, மாவில் சிறிது சிறிதாக தெளித்து கலக்கவும். புட்டு மாவு பக்குவத்தில் கலக்க வேண்டும். அதில் தேங்காய் துருவல், நாட்டுச் சர்க்கரை, ஏலப்பொடி சேர்க்கவும். புட்டு மாவு பக்குவத்தில் இருக்கும் அந்தக் கலவையை கையால் பிடித்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். ரொம்ப அழுத்தாமல் பிடிக்கவும். உடலுக்கு சத்தானது.

அவல் காரக் கொழுக்கட்டை

தேவையானவை:

அவல் - 2 கப்,

தேங்காய் துருவல் - ½ கப்,

இஞ்சி துருவல் - 1 டீஸ்பூன்,

பச்சைமிளகாய் - 3,

உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:

எண்ணெய் - 2 டீஸ்பூன்,

கடுகு - ½ டீஸ்பூன்,

உளுத்தம் பருப்பு,

கடலைப்பருப்பு - தலா 1 டீஸ்பூன்,

பெருங்காயம் - ¼ டீஸ்பூன்,

கறிவேப்பிலை - 10.

செய்முறை:

அவலை ஒரு முறை கழுவி வடி கட்டவும். ஒரு கடாயில் எண்ணை சேர்த்து தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து, பச்சைமிளகாய், கறிவேப்பிலை பொடியாக நறுக்கி போட்டு, உப்பு, தேங்காய் போட்டு வதக்கி, பின் அவலை நன்கு நீர் போக பிழிந்து கடாயில் போட்டு கிளறவும். சுமாராக கிளறி ஆற விட்டு கைகளால் பிடித்து கொழுக்கட்டைகளாகச் செய்து ஆவியில் கொஞ்ச நேரம் வேகவிட்டு எடுத்து பரிமாறவும். எளிதில் ஜீரணமாகும்.

உளுந்து பூரணக் கொழுக்கட்டை

தேவையானவை:

அரிசி மாவு - 2 கப்,

உளுத்தம் பருப்பு - 1 கப்,

பச்சை மிளகாய் - 4,

காய்ந்த மிளகாய் - 1,

உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:

எண்ணெய் - 3 ஸ்பூன்,

கடுகு - 1 ஸ்பூன்,

கறிவேப்பிலை - 5 இலைகள்,

பெருங்காயம் - ¼ ஸ்பூன்.

செய்முறை:

உளுத்தம் பருப்பை 20 நிமிடம் ஊறவிட்டு வடிகட்டி, வடைக்கு அரைப்பது போல் கெட்டியாக, கரகரப்பாக அரைக்க வேண்டும். அரைத்த மாவை ஆவியில் வேகவிட்டு ஆற வைத்து, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து பிரட்டிக் கொள்ளவும். அரிசி மாவை ¼ கப் நீரூற்றி சிறிது உப்பு, ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கொதித்ததும் கொழுக்கட்டைக்கு மேல் மாவாக கிளறி அதில் பூரணத்தை வைத்து மூடி ஆவியில் வேகவிடவும்.

இலை கொழுக்கட்டை

தேவையானவை:

வாழை இலைகள் - 3,

அரிசிமாவு - 1 கப்,

தேங்காய் துருவல் - 1 கப்,

வெல்லம் ½ கப்,

ஏலப்பொடி - ½ டீஸ்பூன்,

உப்பு - ஒரு சிட்டிகை,

நெய் அல்லது எண்ணெய் - 3 டீஸ்பூன்,

சிவக்க வறுத்த கடலைப்பருப்பு - 2 ஸ்பூன்.

செய்முறை:

கால் கப் நீரில் ஒரு பின்ச் உப்பு, ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு கொதித்ததும், சிறிது சிறிதாக மாவு சேர்த்து கிளறி கொழுக்கட்டைக்கான மாவினை தயாரிக்கவும். வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு அதில் தேங்காய் துருவல், ஏலப்பொடி சேர்த்து பூரணம் தயாரிக்கவும். வறுத்த கடலைப்பருப்பையும் கரகரப்பாகப் பொடித்து தேங்காயுடன் சேர்க்கவும். வாழையிலையில் கொஞ்சம் எண்ணெய் தடவி, மாவை வைத்து மெல்லியதாக தட்டி, அதில் பூரணம் வைத்து இலையை மடக்கவும். இதை ஆவியில் வேகவிட்டு

எடுத்தால் கொழுக்கட்டை ரெடி.

நட்ஸ், பழ கொழுக்கட்டை

தேவையானவை:

அரிசி மாவு - 1 கப்,

பாதாம், பிஸ்தா,

முந்திரி, கொட்டை நீக்கிய பேரீச்சை,

உலர் திராட்சை - தலா 10,

நெய் - 2 ஸ்பூன்,

ஏலப்பொடி - ½ ஸ்பூன்.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து திட்டமாக நீரூற்றி மாவு சேர்த்து கொழுக்கட்டை மாவு தயாரிக்கவும். நட்ஸ்களை நன்கு துருவி நெய்யில் வறுக்கவும். உலர் பழங்களை தண்ணி விடாமல் கெட்டியாக அரைக்கவும். இரண்டையும் கலந்து, ஏலக்காய் பொடி சேர்த்து பூரணமாக்கவும். கிண்டிய கொழுக்கட்டை மாவை எண்ணெய் தொட்டு சிறு உருண்டைகளாக்கி கிண்ணம் போல் செப்பு செய்து அதில் தேவையான அளவில் பூரணம் வைத்து மூடி மோதகமாக்கி ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

சிவப்பரிசி உப்புமா கொழுக்கட்டை

தேவையானவை:

சிவப்பரிசி - 2 கப்,

உளுத்தம் பருப்பு,

கடலைப்பருப்பு - தலா 2 ஸ்பூன்,

கறிவேப்பிலை 1 ஆர்க்,

உப்பு - திட்டமாக,

இஞ்சி துருவல் - 1 ஸ்பூன்,

காய்ந்த மிளகாய்,

பச்சை மிளகாய் - தலா 2,

பெருங்காய பொடி - ½ டீஸ்பூன்,

தேங்காய் துருவல் - ¼ கப்.

தாளிக்க:

கடுகு - 1 ஸ்பூன்,

எண்ணெய் - 50 மி.லி.

செய்முறை:

சிவப்பரிசியை 1 மணி நேரம் ஊறவிட்டு களைந்து வெயிலில் காய வைக்கவும். பிறகு உப்புமா ரவையாக உடைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து, தேங்காய் துருவல், இஞ்சி, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் அரைத்து சேர்த்து 4 கப் நீர் விட்டு, திட்டமாக உப்பு சேர்த்து கொதித்து வந்ததும் உடைத்த அரிசியினை சேர்த்து கிண்டவும். ஆறிய பின் உருண்டைகளாக பிடித்து ஆவியில் வேகவிடவும். சிவப்பரிசி பிடிக் கொழுக்கட்டை ரெடி.

தொகுப்பு: ப்ரியா

 

Advertisement