பழசாலட் புட்டிங்
தேவையான பொருட்கள்:
ஆப்பிள் - 1
வாழைப்பழம் - 6
திராட்சை கொட்டை எடுத்து தோல் உரித்தது - தேவையானது
ஆரஞ்சு - 1
மாம்பழம் - 1 சிறியது
செய்முறை:
பழங்களை கழுவி சிறு சிறு துண்டுகளாக பக்குவமாக அரிந்து சிறிது சர்க்கரையுடன் கலந்து வைத்துக் கொள்ளவும். அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களை வைத்து இந்த புட்டிங் செய்தால் சிறப்பு. காயாக இருந்தால் சிறிது தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வரும்வரை பழங்களை அடுப்பில் வைக்கலாம். இந்த மாதிரி வெட்டி தயாரித்த புதிய பழங்களை புட்டிங் பாத்திரத்தில் வைக்கவும். ஜெல்லி பாக்கெட் ஒன்றில் உள்ள ஜெல்லிக் குச்சிகள் முழுவதையும் 550 மில்லி லிட்டர் வெதுவெதுப்பான தண்ணீரில் கலக்கவும். இந்த ஜெல்லி கலவையை ஆறிய பின் பழக்கலவையுடன் ஊற்றி ஃப்ரிட்ஜில் குளிர வைக்கவும்.