வெந்தய கேழ்வரகு தோசை
தேவையானவை:
முளைக்கட்டிய வெந்தயம் - 50 கிராம்,
கேழ்வரகு மாவு - 250 கிராம்,
வெங்காயம் - 100 கிராம்,
அரிந்த பச்சை மிளகாய் - 3,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - 50 மிலி.
செய்முறை:
வெந்தயத்தில் உப்பு சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். அதில் அரிந்த வெங்காயம், பச்சை மிளகாய், கேழ்வரகு மாவு சேர்த்து தோசை மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். தோசைக்கல்லில் எண்ணெய் தடவி கரைத்த மாவை தோசையாக சுட்டு எடுக்கவும். விருப்பப்பட்டால் துருவிய கேரட் (அ) கோஸ் சேர்த்துக் கொள்ளலாம். சுவையான தோசை தயார்.