வெண்டைக்காய் மோர்க்குழம்பு
எண்ணெய்-தேவையான அளவு.
வெண்டைக்காய்-1 கப்.
கடுகு-1/2 தேக்கரண்டி.
சீரகம்-1/2 தேக்கரண்டி.
உளுந்து-1/2 தேக்கரண்டி.
கருவேப்பிலை-சிறிதளவு.
காய்ந்த மிளகாய்-4
மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி.
பெருங்காயத்தூள்-1/2 தேக்கரண்டி.
கொத்தமல்லி-சிறிதளவு.
உப்பு-1 தேக்கரண்டி.
தயிர்-200 ml.
அரைத்து கொள்ள:
துருவிய தேங்காய்- 1 கப்.
சீரகம்-1 தேக்கரண்டி.
இஞ்சி-1 துண்டு.
பச்சை மிளகாய்-4
ஊற வைத்த அரிசி-1 தேக்கரண்டி.
ஊற வைத்த துவரம் பருப்பு-1 தேக்கரண்டி.
செய்முறை:
முதலில் மிக்ஸியில் துருவிய தேங்காய் 1 கப், 1 தேக்கரண்டி சீரகம், இஞ்சி 1 துண்டு, பச்சை மிளகாய் 4, ஊற வைத்த துவரம் பருப்பு 1 தேக்கரண்டி, ஊற வைத்த அரிசி 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.இப்போது கடாயில் 1 குழிக்கரண்டி எண்ணெய் விட்டு நறுக்கி வைத்திருக்கும் வெண்டைக்காய் 1 கப்பை சேர்த்து 2 சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்.இப்போது அதே கடாயில் 1 குழிக்கரண்டி எண்ணெய் விட்டு ½ தேக்கரண்டி கடுகு, ½ தேக்கரண்டி சீரகம், ½ தேக்கரண்டி உளுந்து, காய்ந்த மிளகாய் 4, கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். இப்போது இதில் ½ தேக்கரண்டி மஞ்சள் தூள், 1/2 தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்துவிட்டு அரைத்த விழுதை இதில் சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் வதக்கிய வெண்டைக்காயையும் 1 தேக்கரண்டி உப்பு சேர்த்து வேக விடவும்.இப்போது அடித்து வைத்திருக்கும் 200ml தயிரை சேர்த்துக் கொள்ளவும். கடைசியாக கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து இறக்கினால் சுவையான வெண்டைக்காய் மோர்க்குழம்பு தயார்.