முட்டை பணியாரம்
தேவையானவை :
முட்டை - 4,
வெங்காயம் - 2,
பச்சை மிளகாய் - 2,
சீரகம் - 1/4 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
நறுக்கிய மல்லிதழை - 1 டீஸ்பூன்,
பால் - 2 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
வெங்காயம், பச்சை மிளகாயை சிறியதாக நறுக்கி கொள்ளவும். முட்டையை உப்பு, மஞ்சள் தூள், பால் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பணியார கல்லை சூடாக்கி எண்ணெய் ஊற்றி முட்டை கலவையை ஊற்றி வெந்த பின்னர் திருப்பி போட்டு லேசாக சிவந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.