முட்டை பணியார குழம்பு
தேவையான பொருட்கள்
2 பெரிய வெங்காயம்
2 பெரிய வெங்காயம் மிக்ஸியில் அரைப்பதற்கு
2 தக்காளி
2 டீஸ்பூன் உப்பு
2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
1 டீஸ்பூன் தனியாத்தூள்
1 டீஸ்பூன் கரம் மசாலா
100 கிராம தேங்காய் பேஸ்ட்
சிறிதளவுகொத்தமல்லி
முட்டை பணியாரம் செய்வதற்கு
4 பெரிய வெங்காயம்
5 முட்டை
2 டீஸ்பூன் உப்பு
1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
5 டீஸ்பூன் மஞ்சள் தூள்
செய்முறை
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து அது சூடான பிறகு அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து அதனுடன் பொடியாக நறுக்கி வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளவும். வெங்காயம் வதங்கிய பிறகு இப்போது மிக்ஸியில் வெங்காயத்தை சேர்த்து அரைத்து இப்போது அதனுடன் சேர்த்துக் கொள்ளவும்.வெங்காயம் நன்றாக வதங்கி பிறகு இப்போது அதில் பொடியாக அரிந்த தக்காளியை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். அதனுடன் உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் தனியா தூள் மற்றும் கரம் மசாலாவை சேர்த்து நன்றாக வத்கவும்.வதங்கிய பிறகு இப்போது தேங்காய் பேஸ்ட் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.பொடியாக நறுக்கிய வெங்காயத்தை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் முட்டையை சேர்த்து பினநாதன் உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து சூடான பிறகு அதில் எண்ணெய் சேர்த்து முட்டை கலவையை போட்டு ஒரு பக்கம் வெந்த பிறகு திருப்பி போட்டு மறுபக்கமும் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.பணியாரத்தை குழம்பில் போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும் கடைசியில் கொத்தமல்லியை தூவி விடவும்.