முருங்கைக் கீரை சப்பாத்தி
தேவையான பொருட்கள்
Advertisement
1 1/2 டம்ளர் கோதுமை மாவு
1 கைப்பிடி முருங்கைக் கீரை
1/2 டம்ளர் சுடு தண்ணீர்
1/4 ஸ்பூன் மிளகாய்த்தூள்
1/4 ஸ்பூன் கரம் மசாலாத்தூள்
1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
2 ஸ்பூன் நெய்
உப்பு, எண்ணெய் தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்த முருங்கைக்கீரையை வதக்கவும்.அதோடு மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் மஞ்சள்தூள் கீரைக்கு தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.கோதுமை மாவோடு வதக்கிய முருங்கைக்கீரை கீரை, கோதுமை மாவுக்கு தேவையான உப்பு,1/2 டம்ளர் சுடுதண்ணீர் ஒருஸ்பூன்நெய்சேர்த்து சப்பாத்தி மாவு பிசைந்து கொள்ளவும்.மாவைத் தேய்த்து தோசைக்கல்லில் போட்டு எடுக்கவும். சுவையான ஆரோக்கியமான முருங்கைக்கீரை சப்பாத்தி தயார்.
Advertisement