தீபாவளி சிறப்பு சமையல்
கருப்புகவுனி அரிசி முறுக்கு
தேவையான பொருட்கள்
கருப்புகவுன் அரிசி - 1/4 கிலோ
பொட்டுக்கடலை - 1/4 கிலோ
வெண்ணெய் - 25 கிராம்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
ஓமம் - டேபிள் ஸ்பூன்
எள் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 லி.
செய்முறை
கருப்புகவுனி அரிசியை 4 மணி நேரம் ஊற வைத்து நிழலில் காய வைத்து அரைத்ததும் பொட்டுக்கடலை மாவு, ஓமம், எள், உப்பு வெண்ணெய், மிளகாய்த் தூள் ஆகியவற்றை சேர்த்து முறுக்கு சுடும் பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். பிறகு வாணலி அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், முறுக்கு பிழியும் குழாயில் மாவை போட்டு ஒவ்வொரு முறுக்காக பிழிந்து எடுக்கவும். சுவையான கருப்புகவுனி அரிசி முறுக்கு தயார்.
மாப்பிள்ளை சம்பா அதிரசம்
தேவையான பொருட்கள்
மாப்பிள்ளை சம்பா அரிசி - 1/4 கிலோ
பச்சரிசி - 1/4 கிலோ
வெல்லம் - 1/2 கிலோ
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
செக்கு கடலை எண்ணெய் - 1 லிட்டர்.
செய்முறை
மாப்பிள்ளை சம்பா அரிசி மற்றும் பச்சரிசியை ஊற வைத்து நிழலில் காய வைத்து அரைத்துக் கொள்ளவும். வெல்லத்தை சுத்தம் செய்து பாகுபதத்தில் காய்ச்சி கொள்ளவும். ஏலக்காய் பொடி சேர்க்கவும். அரைத்த மாவை சிறிது சிறிதாக போட்டு கிளறவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதிரசமாக தட்டி போடவும். வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து எண்ணெய் பிழிந்து வைக்கவும். சுவையான மாப்பிள்ளை சம்பா அதிரசம் தயார்.