கறிவேப்பிலை ஊறுகாய்
தேவையானவை:
கறிவேப்பிலை - 2 கப்,
காய்ந்த மிளகாய் - 10,
புளி - நெல்லிக்காய் அளவு,
கடுகு, பெருங்காயத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கறிவேப்பிலையை வதக்கி இறக்கவும். இதனுடன் பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், புளி, உப்பு சேர்த்து வதக்கவும். அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நீருக்குப் பதில் புளித் தண்ணீர் விட்டு அரைத்து எடுக்கவும். 50 மில்லி எண்ணெயில் கடுகு தாளித்து இதன் மேல் ஊற்றிக் கலக்கவும்.