தயிர் கார பணியாரம்
இட்லி மாவு - ஒரு கப் (பெரியது)
வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 6
கறிவேப்பிலை & கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
கடுகு - 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - ஒரு கைப்பிடி
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
சாட் மசாலா - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தயிர் - 1 லிட்டர்
காராபூந்தி - ஒரு கைப்பிடி
கேரட் - 1
தேங்காய் - அரை மூடி.
செய்முறை
அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய் வதக்கி மாவில் சேர்க்கவும். கடலைப் பருப்பு மாவில் சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்கவும். பின்பு துருவிய கேரட், சிறிய துண்டுகளாக நறுக்கிய தேங்காய், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு கலக்கவும். குழிப் பணியாரம் செய்யவும். பிறகு தயிரை நன்கு கலக்கி உப்பு சேர்க்கவும். சூடாக எடுத்த பணியாரத்தைப் போட்டு ஊற வைக்கவும். அதன் மீது மிளகு தூள், சாட் மசாலா மற்றும் காரா பூந்தி தூவவும். சுவையான தயிர் காரப் பணியாரம் தயார்.