க்ரீமி தயிர் சாதம்
தேவையான பொருட்கள்
                 Advertisement 
                
 
            
        2கப் சாதம்
2டேபிள் ஸ்பூன் தயிர்
3 டேபிள் ஸ்பூன் ஃப்ரெஷ் க்ரீம்
தேவையானஅளவு உப்பு
1 கப் ஆறின பால்
1டேபிள் ஸ்பூன் எண்ணெய்
1/2டீஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு
1 பச்சை மிளகாய் பொடியாக கட் செய்தது
சிறிதளவுகறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை
2 சிட்டிகை பெருங்காயத்தூள்
2டீஸ்பூன் பொடியாக கட் செய்த இஞ்சி
செய்முறை
சாதத்தை நன்கு குழைத்து வைக்கவும். இதனுடன் உப்பு, தயிர், ஃப்ரெஷ் க்ரீம், பால் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும். ஒரு சிறிய வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கி சாதத்தில் போட்டு கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து மூடி வைக்கவும். 4 மணி நேரம் கழித்து பரிமாறவும்.
                 Advertisement