கோவைக்காய் வேர்க்கடலை மசாலா பொரியல்
தேவையான பொருட்கள்
1 கப் கோவைக்காய்
1/4 கப் வறுத்த வேர்க்கடலை
1/4 கப் வெங்காயம்
1/2 டீஸ்பூன் மிளகாய் தூள்
1/2 டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய் தூள்
1/2டீஸ்பூன் தனியா தூள்
1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
1/4 டீஸ்பூன் பாவ் பாஜி மசாலா தூள்
தேவையான அளவுஉப்பு
1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
1/4 டீஸ்பூன் கடுகு
1/4 டீஸ்பூன் உளுந்து பருப்பு
1/2 டீஸ்பூன் கடலை பருப்பு
1/4 கப் தேஙகாய் துருவல்
கறிவேப்பிலை
மல்லி இலை
செய்முறை:
கோவைக்காயை கழுவி, விருப்படி நறுக்கி வைத்துக்கொள்ளவும்.வேர்க்கடலையை வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.நறுக்கிய கோவைக்காயை ஆவியில் வேக வைத்து தயாராக வைக்கவும்.பின்னர் கடாயை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம்,வற்றல் மிளகாய் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், ஆவியில் வெந்த கோவைக்காயை சேர்த்து வதக்கி, மேலே கொடுத்துள்ள மசாலா பொருட்களை சேர்க்கவும்.அத்துடன் உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.பச்சை வாசம் போகும் வரை வதக்கி, பின்னர் தேங்காய் துருவல்,நறுக்கிய மல்லி இலை சேர்த்து கலந்து இறக்கினால் கோவைக்காய் வேர்க்கடலை மசாலா பொரியல் தயார்.