மக்காசோள ரவை உப்புமா
தேவையான பொருட்கள்
1 கப் மக்காசோள ரவை
1 கப்சாம்பார் வெங்காயம் (விருப்பப்படி)
2பச்சை மிளகாய்
உப்பு தேவையான அளவு
2&1/2 கப் தண்ணீர்
தாளிக்க :
1 டேபிள் ஸ்பூன் எண்ணை
1/4 டீஸ்பூன் கடுகு
1/2 டீஸ்பூன் உளுந்து பருப்பு
1 டீஸ்பூன் கடலை பருப்பு
கறிவேப்பிலை மல்லி இலை
செய்முறை:
மக்காசோள ரவை எடுத்து தயாராக வைக்கவும். இப்போது எல்லா ஸ்டாரிலும் இந்த ரவை கிடைக்கிறது.சாம்பார் வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி இலை நறுக்கி வைக்கவும். கறிவேப்பிலை எடுத்து தயாராக வைக்கவும்.கடாயை ஸ்டவ்வில் வைத்து சூடானதும், எண்ணை ஊற்றி, கடுகு, உளுந்துப்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி இலை சேர்த்து நன்கு வதக்கவும்.பின்னர் தண்ணீர், உப்பு சேர்த்து கொதித்ததும், ரவையை சேர்த்து கலந்து மிதமான சூட்டில் ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும். பின்னர் எடுத்து கலந்து, பரிமாறும் பௌலுக்கு மாற்றி மல்லி இலை தூவி அலங்கரித்தால் சுவையான மெது மெது மக்காசோள உப்புமா சுவைக்கத்தயார். இந்த உப்புமா மிகவும் சுவையாக இருக்கும். செய்வது மிகவும் சுலபம். அனைவரும் செய்து சுவைக்கவும்.