கொத்தமல்லி கீரை சூப்
தேவையான பொருட்கள்
Advertisement
1கைப்பிடி கொத்தமல்லி கீரை
5 சின்ன வெங்காயம்
6பல் பூண்டு
1/2 தக்காளி
1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்
1/2டீஸ்பூன்மிளகு தூள்
1டீஸ்பூன் சீரகத்தூள்
2டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார் மாவு
1டீஸ்பூன் நெய்
5டம்ளர் தண்ணீர்
செய்முறை:
சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி மூன்றையும் பொடியாக நறுக்கவும். கீரையை சுத்தம் செய்து வைக்கவும்.ஒரு கடாயில் சிறிது நெய் விட்டு பூண்டை வதக்கவும். வெங்காயம் சேர்த்து வதக்கவும். தக்காளி சேர்த்து வதக்கவும். பின் மஞ்சள் தூள், மிளகு தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து வதக்கி, 5 டம்ளர் தண்ணீர் விட்டு வேகவிடவும். நன்கு கொதிக்கும் போது கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பின் கார்ன்ஃப்ளார் மாவை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து அதில் சேர்த்து சுண்ட விடவும். பின் பரிமாறவும்.
Advertisement