தேங்காய்ப்பால் தக்காளி சாதம்
தேவையான பொருட்கள்
1/2 கிலோ அரிசி
1/2 கிலோ தக்காளி
4 பச்சை மிளகாய்
1/2 கப் சின்ன வெங்காயம்
2டேபிள் ஸ்பூன் பொடியாக கட் செய்த கொத்தமல்லித்தழை
1/4 கப் புதினா கட் செய்தது
20 கிராம் பூண்டு தோல் உரித்தது
20 கிராம் இஞ்சி
8சிறு துண்டு பட்டை
8 இலவங்கம்
8 ஏலக்காய்
2 மராட்டிமொக்கு
4 அன்னாசிப்பூ இதழ்
1பிரியாணி இலை
1டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
1/4கப் எண்ணெய்
4டேபிள் ஸ்பூன் நெய்
தேவையானஅளவு உப்பு
200மிலி தேங்காய்ப்பால்
200கிராம் பச்சைப்பட்டாணி
செய்முறை:
அரிசியை கழுவி 1மணி நேரம் ஊற வைக்கவும். தக்காளியை அரைத்து வடிகட்டி வைக்கவும்.தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்.குக்கரில் எண்ணெய், 2டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து காய்ந்ததும் 2பட்டை, 2இலவங்கம், ஏலக்காய், 1பிரியாணி இலை, 4இதழ் அன்னாசிப்பூ, 2மராட்டிமொக்கு போட்டு வதக்கி வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.இதில் இஞ்சி பூண்டு, மீதமுள்ள கரம் மசாலாக்களை சேர்த்து நைசாக அரைத்து சேர்த்து நன்கு கலந்து விடவும். இதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும். பின் கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து வதக்கி, உப்பு, தக்காளி விழுது சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.பின்னர் பச்சைப்பட்டாணி சேர்த்து வதக்கவும். இதில் தேங்காய்ப்பாலுடன் சேர்த்து 2 பங்கு தண்ணீர் சேர்த்துக் கொதித்ததும் அரிசியைப் போட்டு நன்கு கலந்து நீர் வற்றி அரிசியும் நீரும் சமமாக இருக்கும் சமயம் 2டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து குக்கரை மூடி 1 விசில் விட்டு, அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் வேக வைத்து அடுப்பை அணைக்கவும். 10 நிமிடங்கள் கழித்து மூடியைத் திறந்து கலந்து சூடாகப் பரிமாறவும்.