தேங்காய்ப்பால் புலாவ்
Advertisement
பாஸ்மதி அரிசி - 1 கப்
இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
தேங்காய் - அரைமூடி
புதினா - 1 கிண்ணம்
வெங்காயம் - 1
பட்டை, லவங்கம் - 2 துண்டுகள்.
செய்முறை:
பாஸ்மதி அரிசியை 5 நிமிடம் ஊற விடவும். தேங்காயை துருவி மிக்ஸி ஜாரில் அரைத்து வடிகட்டி பால் எடுத்துக் கொள்ளவும். பின்னர், குக்கரில் எண்ணெய்விட்டு, பட்டை லவங்கம் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதனுடன் புதினா இலைகளை சேர்த்து வதக்கவும். அடுத்து பாஸ்மதி அரிசியை களைந்து அதனுடன் சேர்த்து லேசாக வதக்கவும். பின்னர், எடுத்து வைத்துள்ள தேங்காய்ப் பாலை ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் விதத்தில் சேர்த்து கிளறி மூடிவிட்டு. 2 விசில் விட்டு இறக்கவும். தேங்காய்ப் பால் புலாவ் தயார்.
Advertisement