தேங்காய்பால் ஜிகர்தண்டா
தேவையான பொருட்கள்
Advertisement
3 பேரிச்சம் பழம்
தலா 2 முந்திரி, பாதாம், பிஸ்தா
கால் மூடி சிறிய தேங்காய்
1 ஸ்பூன் பாதாம பிசின்
1 சிட்டிகை சப்ஜா விதை
தேவைக்கு கருப்பட்டி (optional)
செய்முறை
1 டம்ளர் தேங்காய் பால் எடுத்து கொள்ளுங்கள். பாதாம் பிசினை இரவே ஊற வைத்து கொள்ளுங்கள்.சப்ஜா விதை பத்து நிமிடம் ஊற வைத்து கொள்ளுங்கள்.பேரிச்சம் பழம், முந்திரி, பாதாம், பிஸ்தா அனைத்தையும் 30 நிமிடம் ஊற வைத்து அரைத்து கொள்ளுங்கள். தேங்காய்ப்பாலில் அரைத்த உலர் பழங்கள், பாதாம் பிசின், சப்ஜா விதை ஆகியவற்றை கலந்து பரிமாறுங்கள். தேவைப்பட்டால் பழங்கள், மற்றும் கருப்பட்டி சேர்த்து கொள்ளலாம்
Advertisement