சாக்லேட் கேக்
தேவையானவை:
டார்க் சாக்லேட் - 2 கப்,
வெண்ணெய் - ½ கப்,
கோகோ பவுடர் - 3 ஸ்பூன்,
சர்க்கரை - ½ கப்,
பால் ¼ கப்,
வெனிலா எசன்ஸ் - 1 ஸ்பூன்,
பேக்கிங் பவுடர் - ½ ஸ்பூன்,
மைதா - 1 கப்,
வெள்ளை நிற சாக்லேட் துருவியது - 2 டீஸ்பூன்.
செய்முறை:
ஒரு கண்ணாடி பவுலில் டார்க் சாக்லேட், வெண்ணெய் சேர்த்து டபுள் பாயிலிங் மெத்தடில் உருக்கவும். (நடு பாத்திரத்தில் சுடுநீரில் வைத்து எடுக்கவும்). இக்கலவையை ஆறவிட்டு சர்க்கரை சேர்க்கவும். மைதா, பேக்கிங் பவுடர், கோகோ பவுடர் ஆகியவற்றை சலித்து சேர்க்கவும். இதனுடன் வெனிலா எசன்ஸ் சேர்த்து தேவையான அளவு பால் சேர்த்து கலக்கவும். மைக்ரோ ஓவனை ப்ரீ ஹீட் செய்து இக்கலவையை வெண்ணெய் தடவிய பேக்கிங் ட்ரேயில் சேர்த்து 25 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும். இதன் மேல் துருவிய வெள்ளை நிற சாக்லேட்டை துருவி தூவவும். சாக்லேட் கேக் தயார்.