சைனீஸ் ஸ்டைல் சிக்கன் பிரைட் ரைஸ்...!
சிக்கனை மேரினேட் செய்ய தேவையான பொருட்கள்:
300 கிராம் சிக்கன்
2டீஸ்பூன் சோளமா
2டீஸ்பூன் சோயா சாஸ்
1/2டீஸ்பூன் பேக்கிங் சோடா [அப்பச் சோடா]
2டீஸ்பூன் சர்க்கரை
1டீஸ்பூன் மிளகாய்த்தூள்
2டீஸ்பூன் எண்ணெய் [சிக்கனை வதக்க தேவையானளவு]
முட்டையை வதக்க தேவையான பொருட்கள்:
5 முட்டைகள்
3 ஸ்பூன் எண்ணெய் [முட்டையை வதக்க தேவையானளவு ]
1டீஸ்பூன் உப்பு
1டீஸ்பூன் மிளகுத்தூள்
பிரைட் ரைஸ் செய்ய தேவையான பொருட்கள்:
6 கப் சாதம் [ 85% அவித்தது ]
5 ஸ்பூன் எண்ணெய் [பிரைட் ரைஸ் செய்ய தேவையானளவு ]
1 ஸ்பூன் நறுக்கிய பூண்டு
1 ஸ்பூன் அரைத்த இஞ்சி
1 நறுக்கிய வெங்காயம் [பெரியது]
5 நறுக்கிய பீன்ஸ் [போஞ்சி]
3 நறுக்கிய கரட்
½ கப் பச்சை பட்டாணி [கிரீன் பீஸ்]
3 ஸ்பூன் டார்க் சோயா சாஸ்
தேவையானளவு உப்பு
தேவையானளவு மிளகுத்தூள்
(ஸ்பூன் = மேசைக்கரண்டி)
(டீஸ்பூன் = தேக்கரண்டி)
(1 கப் = 128 கிராம்)
செய்முறை
முதலாலது படி சிக்கனை வதக்கல்.
* சிக்கனை ஒரே அளவான துண்டுகளாக சதுர வடிவத்தில் வெட்டிக் கொள்ளவும்.
* சோளமா, சோயா சாஸ், பேக்கிங் சோடா, சர்க்கரை, மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து, நன்றாக கலந்து கொள்ளவும்.
* மேரினேட் செய்த சிக்கனை 10 நிமிடங்கள் வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, மேரினேட் செய்த சிக்கனை பொன் நிறமாகும் வரை வதக்கவும்.
* பின்னர் வதக்கிய சிக்கனை வேறாக எடுத்து வைக்கவும்.
இரண்டாவது படி முட்டையை வதக்கல்.
* அதே கடாயில் எண்ணெய் விட்டு, முட்டைகளை நன்றாக அடித்து ஊற்றவும்.
* பின்பு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கிளறவும்.
முட்டை உதிரி, உதிரியாக வரும் வரை வதக்கவும்.
* பின்னர் வதக்கிய முட்டைகளை வேறாக எடுத்து வைக்கவும்.
மூன்றாவது படி பிரைட் ரைஸ் தயாரித்தல்.
* அதே கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய பூண்டு, அரைத்த இஞ்சி, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பீன்ஸ், நறுக்கிய கரட், பச்சை பட்டாணி ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.
90% காய்கறிகள் வெந்ததும், வதக்கி வைத்த சிக்கனை சேர்த்து கிளறவும்.
* பின்னர் 85% அவித்த சாதத்தை சேர்க்கவும்.
டார்க் சோயா சாஸ்,தேவையானளவு உப்பு,தேவையானளவு மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.
இறுதியாக வதக்கி வைத்த முட்டையை சேர்த்து நன்கு கிளறவும்.
* அவ்வளவுதான் சூப்பரான சைனீஸ் ஸ்டைல் பிரைட் ரைஸ் தயார்.