சில்லி முட்டை
தேவையான பொருட்கள்
6 முட்டை
2 ஸ்பூன் சோள மாவு
இரண்டு ஸ்பூன் மைதா மாவு
ஒரு ஸ்பூன் அரிசி மாவு
ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்
2 1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
ஒரு ஸ்பூன் கரம் மசாலா
ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
ஒரு சிட்டிகை சோடா உப்பு
சிறிதளவுகேசரி பவுடர்(தேவைப்பட்டால்)
தேவையானஅளவு உப்பு
பொரிக்க தேவையான அளவு எண்ணெய்
செய்முறை:
முதலில் முட்டைகளை தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும் அது ஆறிய பிறகு உரித்துக் கொள்ளவும்.முட்டைகளை தேவையான வடிவில் வெட்டி கொள்ளவும்.ஒரு பௌலில் சோள மாவு,மைதா மாவு,அரிசி மாவு, மிளகாய் தூள் மஞ்சள் தூள்,கரம் மசாலா,உப்பு, கேசரி பவுடர் ஒரு சிட்டிகை சோடா உப்பு ஆகியவற்றை சேர்த்து அதில் சிறிது தண்ணீர் சேர்த்து சில்லி போடுவதற்கு பதமாக கலந்து கொள்ளவும்.நறுக்கி வைத்த முட்டையை இந்த கலவையில தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.இப்பொழுது அருமையான சுவையாக சில்லி முட்டை தயார்.