மொறு மொறு கொண்டைக்கடலை சாலட்
கறுப்புக் கொண்டை கடலை - ஒரு கப்
குடைமிளகாய் - 1
வெள்ளரிக்காய் - 1
தக்காளி - 1
முட்டைக்கோஸ் - 1
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
பன்னீர் - 100 கிராம்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க
கொத்தமல்லிக் கீரை - ஒரு கைப்பிடி.
செய்முறை
கொண்டைக்கடலை இரவு முழுவதும் ஊறவைத்து வேகவைத்து கொள்ளவும். அதில் கரம் மசாலா, மிளகாய் தூள், உப்பு சேர்த்து சிறிது கலக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி பொரித்துக் கொள்ளவும். பிறகு, பன்னீர், தயிர், கொத்தமல்லி கீரை, உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் நறுக்கிய வெள்ளரிக்காய், தக்காளி, முட்டைகோஸ், குடைமிளகாய் பொரித்துக் கொண்டே கடலை அரைத்த பன்னீர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து வைக்கவும். பசுமையான மொறு மொறு கொண்டைக்கடலை சாலட் தயார்.