பாசிப்பருப்பு பக்கோடா
தேவையானவை:
பாசிப்பருப்பு - 1 கப்,
தனியா - 2 டீஸ்பூன்,
சோம்பு - ½ டீஸ்பூன்,
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
பாசிப்பருப்பை 1 மணி நேரம் ஊறவைக்கவும். தனியா, சோம்பு இரண்டையும் ஒன்றிண்டாகப் பொடிக்கவும். பாசிப் பருப்பை தண்ணீர் வடித்து சற்று கரகரப்பாக அரைக்கவும். எண்ணெயை தவிர மற்ற பொருட்களை எல்லாம் ஒன்றாக கலந்து காய்ந்த எண்ணெயில் சிறு சிறு உருண்டைகளாக வேகவிட்டு எடுக்கவும். இது வட இந்தியாவில் ஃபேவரட் பக்கோடா. இதற்கு தொட்டுக் கொள்ள பச்சைச் சட்னி, இனிப்புச் சட்னி நல்ல சைட் டிஷ்.