சிக்கன் சாமை நூடுல்ஸ்
தேவையான பொருட்கள்
2சாமை நூடுல்ஸ் பாக்கட்
2டேபிள் ஸ்பூன் இஞ்சி துருவியது
3 டேபிள் ஸ்பூன் பூண்டு துருவியது
1பெரிய வெங்காயம் பொடியாக கட் செய்தது
4 பச்சை மிளகாய் கட் செய்தது
1பெரிய கேரட் பொடியாக கட் செய்தது
100 கிராம் முட்டைக்கோஸ் பொடியாக கட் செய்தது
1டேபிள்ஸ்பூன் சோயா சாஸ்
2டேபிள் ஸ்பூன் ரெட் சில்லி சாஸ்
1டீஸ்பூன் வினிகர்
1டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள்
5 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
8 முட்டை
150 கிராம் போன்லெஸ் சில்லி சிக்கன்
1கைப்பிடியளவு கொத்தமல்லித்தழை பொடியாக கட் செய்தது
தேவையானஅளவு உப்பு
செய்முறை:
ஒரு அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் நூடுல்ஸ் உடைத்து சேர்த்து சிறிது உப்பு சேர்த்து வெந்ததும் வடிகட்டி ஆற விடவும்.தேவையான அனைத்துப் பொருட்களையும் எடுத்து வைக்கவும்.
ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்து விடவும். இதனுடன் இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.இதற்குத் தேவையான உப்பு சேர்த்து வதக்கவும். பின் கேரட், முட்டைக்கோஸ் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பின் சிக்கன் சேர்த்து வதக்கவும். இதில் ஆறிய நூடுல்ஸ் சேர்த்து ஹை ஃப்ளேமில் 2 நிமிடம் வதக்கி வினிகர், சோயா சாஸ், சில்லி சாஸ் சேர்த்து நன்கு வதக்கவும். பின் கொத்தமல்லித்தழை, மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலந்து சூடாகப் பரிமாறவும்.