செட்டிநாடு மீன் குழம்பு
தேவையான பொருட்கள்
1 கிலோசங்கரா மீன்
50 கிராம்புளி
20மிளகாய்
3 ஸ்பூன்மல்லி
1 ஸ்பூன்மிளகு
1 ஸ்பூன்சோம்பு
1 ஸ்பூன்மஞ்சள்தூள்
2வெங்காயம்
3தக்காளி
5பச்சை மிளகாய்
20 பல்பூண்டு
1பட்டை
3கிராம்பு
1அண்ணாசிபூ
1/4 லிட்டர்ந. எண்ணெய்
1 ஸ்பூன்கடுகு
1/2 ஸ்பூன்வெந்தயம்
தேவையான அளவுதண்ணீர்
11/2 ஸ்பூன்குழம்பு மிளகாய்த்தூள்
செய்முறை
மீன்களை சுத்தம் செய்து எடுத்து வைத்து கொள்ளவும். புளியை கரைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.கடாயில் மிளகாயை வறுத்து தண்ணீரில் ஊறவைத்து கொள்ள வேண்டும். வரமல்லி, சோம்பு,மிளகு, பட்டை, கிராம்பு, அண்ணாசிபூ இவற்றை போட்டு வறுத்து மிக்ஸியில் போட்டு ஊறவைத்து உள்ள மிளகாய் வற்றல், ஒரு தக்காளி சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும். மீன் குழம்பு பாத்திரம் அடுப்பில் வைத்து ந. எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வெந்தயம் சேர்த்து பச்சை மிளகாய், பூண்டு, வெட்டி எடுத்து வைத்து உள்ள வெங்காயம், தக்காளி போட்டு நன்றாக வதக்கவும். அத்துடன் மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள விழுதுதில் பாதி அளவு போட்டு நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். பிறகு புளியை கரைத்து ஊற்றி உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொதிக்க விடவும். 11/2 ஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கலந்து கொதிக்க வைத்து அதனுடன் மீன் துண்டுகளை போட்டு இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்.சுவையான செட்டிநாடு மீன் குழம்பு ரெடி.