சன்னா பன்னீர் மசாலா
தேவையான பொருட்கள்
1பெரிய கப் வேக வைத்த சன்னா./ வெள்ளை கடலை
50 கிராம் வரை பனீர் துண்டுகள்
1மீடியம் அல்லது பெரிய சைஸ் உருளைக்கிழங்கு
1டேபிள் ஸ்பூன் எண்ணெய்
1இன்ச் பட்டை
3 கிராம்பு
1பிரிஞ்சி இலை
1 ஏலக்காய்
2மீடியம் சைஸ் பெரிய வெங்காயம்
3 மீடியம் சைஸ் பழுத்த தக்காளி
2 to 3 பச்சை மிளகாய்
1டீஸ்பூன் இஞ்சி பூண்டு
1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்
செய்முறை
ஊற வைத்த சென்னாவுடன் ஒரு உருளைக்கிழங்கை சேர்த்து குக்கரில் 5 அல்லது 6 சவுண்ட் விட்டு வேகவைத்து கொள்ளவும். பெரிய வெங்காயத்தை அரிந்து மிக்ஸியில் அதனுடன் இஞ்சி பூண்டு இரண்டையும் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். இதை தனியாக எடுத்து வைத்துவிட்டு, அதே மிக்ஸியில் தக்காளி துண்டுகளை போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.(தண்ணீர் சேர்க்க வேண்டாம்).தக்காளி விழுதை தனியாக எடுத்து வைத்து விடவும். குக்கரில் இருந்து வேக வைத்த சென்னாவை வடித்து எடுத்துக் கொள்ளவும்.உருளைக்கிழங்கை தோலை உரித்து மசித்து வைத்துக் கொள்ளவும். அதே குக்கரில் எண்ணெய் விட்டு ஒரு பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் இதை தாளித்து விடவும் கீறிய பச்சை மிளகாயை அதில் சேர்த்து தாளிக்கவும்,பிறகு அதில் வெங்காயம் பூண்டு இஞ்சி சேர்த்த அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.வெங்காயம் பச்சை வாசம் போக நன்கு வதங்கியவுடன் அதில் தக்காளி விழுதை சேர்த்து மூன்று அல்லது ஐந்து நிமிடம் வரை அதன் தண்ணீர் சுண்ட வத க்கவும். பிறகு எடுத்து வைத்த வர மிளகாய் தூள்,கஷ்மீரி மிளகாய் தூள், மஞ்சள் தூள், தூள் உப்பு கொத்தமல்லித்தூள், இவை அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்து விடவும் ஒரு நிமிடம் பச்சை வாசம் போக விடவும். (காரம் தங்களுக்கு ஏற்றார் போல் சேர்த்துக் கொள்ளவும்.)அரை கப் தண்ணீர் சேர்த்து இவற்றை கொதிக்க விடவும். பிறகு கொண்டைக்கடலை மற்றும் மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து ஒரு கொதி விடவும். பின்பு வறுத்த பணீரை சேர்த்து கொதிக்க விடவும். தங்களுக்குத் தேவைக்கு ஏற்றார் போல் தண்ணீர் சேர்த்து கிரேவியை தயாரித்துக் கொள்ளவும். கடைசியாக கரம் மசாலா தூள் சேர்க்கவும் நன்கு கலந்து விட்டு பிறகு அதில் கஸ்தூரி மேதியை சேர்க்கவும். சர்க்கரை போட்டு கலந்து விட்டு லேசாக ஒரு கொதி விட்டு இறக்கி வைக்கவும். சுவையான ஆலு சன்னா பன்னீர் மசாலா தயார்.