மரவள்ளிக்கிழங்கு பணியாரம்
தேவையானவை:
தோல் நீக்கி, நடுவில் உள்ள நரம்பெடுத்து துருவிய மரவள்ளிக்கிழங்கு - 1 கப்,
துருவிய கேரட் - 2 டேபிள் ஸ்பூன்,
தூள் வெல்லம் - 1/2 அல்லது 3/4 கப்,
பொடியாக நறுக்கி நெய்யில் வறுத்த முந்திரி - 2 டேபிள் ஸ்பூன்,
ஏலப்பொடி - 1/2 டீஸ்பூன்,
நெய் - 1 டேபிள் ஸ்பூன்,
தேங்காய் துருவல் - 1/4 கப்
செய்முறை:
மரவள்ளிக்கிழங்கை இட்லி பாத்திரத்தில் இட்லி தட்டின் அடியில் ஒரு மெல்லிய துணியை போட்டு அதில் கிழங்கை வைத்து மேலே ஒரு துணியை போட்டு (நீர் வடியாமல் இருக்க) வேக வைக்கவும். வெந்ததும் ஒரு தட்டில் கொட்டி மேலே சிறிது நெய் விட்டு வெல்லத்தை சேர்க்கவும். பின் நெய்யில் வதக்கிய கேரட், முந்திரி, தேங்காய்த்துருவல், ஏலப்பொடி சேர்த்து பயன்படுத்தவும்.