முந்திரி கொத்து
தேவையானவை:
பச்சை பயறு,
வெல்லம்,
அரசி மாவு,
துருவிய தேங்காய்,
ஏலக்காய் பொடி,
மஞ்சள் தூள்,
உப்பு,
எண்ணெய்.
செய்முறை:
வெதுவெதுப்பான தண்ணீரில் வெல்லத்தை கொதிக்கவைத்து வெல்ல பாகு தயாரித்துக்கொள்ளவும். பின்னர், பச்சை பயறை நன்கு வறுத்து பொடியாக அரைக்கவும். பின்பு தேங்காயை பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். அதில் அரைத்து வைத்துள்ள பாசி பயறு மாவு மற்றும் ஏலக்காய் பொடி போன்றவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது தயாரித்து வைத்துள்ள வெல்லப் பாகை மீண்டும் சூடுபடுத்தி அதனுடன் கலக்கி வைத்துள்ள பாசிப்பயறு கலவையை சிறிது சிறிதாக சேர்த்து, அவை அனைத்தும் வெல்ல பாகோடு சேருமாறு நன்கு கலக்கவும். அவை நன்கு கலந்த பின்பு வெதுவெதுப்பான சூடுடன் இருக்கும் போதே சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும். பின்பு வேறு பாத்திரத்தில் அரிசி மாவு, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் கலந்து இட்லி மாவு பதத்திற்கு கலக்கவும். பின்னர், தயாரித்த உருண்டைகளை மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். கொத்தாக வேண்டுமென்றால் இரண்டு மூன்று உருண்டைகளை சேர்த்து ஒன்றாக பொரிக்கவும்.