முந்திரி மீன் வறுவல்
தேவையான பொருட்கள்
முந்திரி - 1 கப்
மீன் - 1
மிளகாய்த்தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
மீன் மசாலா - தேவையான அளவு
மஞ்சள் தூள் - தேவையான அளவு
எலுமிச்சைச் சாறு - சிறிதளவு
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை
முதலில் மீனை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு முந்திரியைக் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். அதன்பின், முந்திரியுடன் மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள் தூள், மீன் மசாலா எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைக் கலந்து, மீனின் மீது தடவிக் கொள்ளவும். மீனின் மீது முந்திரி மசாலாவைச் சேர்த்த பின்பு ஐந்து நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பிறகு தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி மீனை அதில் பொரித்து எடுத்தால் சுவையான முந்திரி மீன் வறுவல் ரெடி!