கேரட் ஓட்ஸ் இட்லி
ஓட்ஸ்-1கப்.
எண்ணெய்-சிறிதளவு.
கடுகு-1 தேக்கரண்டி.
கடலைப்பருப்பு-1 தேக்கரண்டி.
சீரகம்-1 தேக்கரண்டி.
உளுந்து-1 தேக்கரண்டி.
பச்சை மிளகாய்-1.
இஞ்சி-1 துண்டு.
கேரட்-1.
ரவை-1கப்.
தயிர்-1 கப்.
கருவேப்பிலை-சிறிதளவு.
கொத்தமல்லி-சிறிதளவு.
உப்பு-தேவையான அளவு.
செய்முறை
முதலில் கடாயில் ஓட்ஸ் 1 கப்பை நன்றாக வறுத்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும். இப்போது அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் சிறிது விட்டு கடுகு 1 தேக்கரண்டி, கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, உளுந்து 1 தேக்கரண்டி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 1, இஞ்சி சிறிதாக நறுகியது 1 துண்டு, துருவிய கேரட் 1, ரவை 1 கப், கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து நன்றாக வதக்கிவிட்டு இத்துடன் அரைத்து வைத்திருக்கும் ஓட்ஸை சேர்த்து அத்துடன் தயிர் 1 கப், உப்பு தேவையான அளவு, தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்திற்கு கலக்கிக்கொள்ளவும். இதை 20 நிமிடம் மூடி வைத்துவிட்டு பிறகு எடுத்து சிறிது கொத்தமல்லி சேர்த்து கலந்துவிட்டு இட்லி பாத்திரத்தில் இட்லி போல ஊற்றி 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும். சுவையான கேரட் ஓட்ஸ் இட்லி தயார்.