கேரட் குல்பி
தேவையான பொருட்கள்
3கேரட்
1/2லிட்டர் பால்
10பாதாம்
10முந்திரி
சர்க்கரை தேவையான அளவு
ஏலக்காய் பவுடர்
செய்முறை:
கேரட்டை தோல் சீவி சிறிது சிறிதாக கட் செய்து சிறிதளவு பாலில் 10நிமிடம் மிதமான தீயில் வேக விடவும் அதனுடன் 5பாதாம்,5முந்திரி சேர்க்கவும்.கேரட் வெந்ததும் ஆற விட்டு அரைத்து எடுக்கவும்.மற்றொரு பாத்திரத்தில் சிறிது பால் எடுத்து அதில் சிறிது சர்க்கரை சேர்த்து பின் சோளமாவு 1 ஸ்பூன் கலந்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் வைத்து கிளறவும்.பின் அரைத்த கேரட் கலவையை அதனுடன் சேர்ந்து கிளறி ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கி பின் அதில் பாதாம் முந்திரியை சிறிது சிறிதாக நறுக்கி அதில் சேர்த்து குல்பி மோல்டில் ஊற்றவும்.8 மணி நேரம் வரை பீரீசரில் வைக்கவும்.பின் மோல்டை லேசாக நீரில் நனைத்து குல்பியை எடுத்து சுவைக்கவும்.