கேரட் ஐஸ்கிரீம்
கேரட் - 4
காய்ச்சிய கெட்டிப்பால் பால் - 1 கப் சர்க்கரை- 1/4 கப்
பாதாம், பிஸ்தா, முந்திரி - தலா 10
ஏலக்காய்த் தூள் -1/2 டீஸ்பூன்
செய்முறை:
கேரட்டின் தோலை சீவி துருவி ஆவியில் வேகவைத்து எடுக்கவும். பின்னர் அதை ஆறவிட்டு சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும். இதனுடன் பால் சேர்த்து கலந்து அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்துக்கிளறவும். இரண்டு கொதி வந்ததும் இறக்கி ஆறவைத்து ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி சிறிய கிண்ணங்களில் ஊற்றி இரண்டு மணி நேரம் ஃப்ரீசரில் வைத்திருந்து எடுத்து அதில் உள்ள கலவையை மீண்டும் மிக்ஸியில் போட்டு மறுபடியும் ஒருமுறை சுற்றி மேலாக பொடித்த பாதாம், பிஸ்தா துருவலை சேர்க்கவும்.முந்திரியை பொடித்து வறுத்தும் சேர்க்கலாம். கிண்ணங்களை மீண்டும் ப்ரீஸரில் வைத்து சில மணிநேரம் கழித்து ஐஸ்கிரீம் பதத்திற்கு வந்ததும் எடுத்து பரிமாறலாம். இது செயற்கை வண்ணங்கள் சேர்க்காத ஹெல்த்தியான ஐஸ்கிரீம்.